தாய்மை -தேன்மொழி
துயில் கொள்
என் முழு நிலவே
அழகான தென்றலே
வரம் வேண்டும் எனக்கு
ஜென்மங்கள் தவறாது
வருவேன் என ....
நானும் பெண்ணாகவே
பிறப்பேன்
உன்னை சுமப்பதற்கே
மழலை சொல்லில்
உன் கன்னக்குழி சிரிப்பில்
தவழும் அழகில்
மயங்குகிறேன் ....
என் முழுநிலவே