பட்டுக் குழந்தைகள் பட்டுப் போகுதே...

பட்டுக்குழந்தைகள் பாசமொட்டுக்கள்
மென்மைமேனிகள் மேன்மையுள்ளங்கள்
சிரிக்கும் பூக்கள் சீர்மிகு மொட்டுக்கள்
அன்பு நெஞ்சங்கள் ஆசை முகங்கள்
மலரும்முன்னே கருகிடுதே!
மனதையுடைத்து பறந்திடுதே!
உயிரைபிழிந்து விரைந்திடுதே!
உறவையருத்து நகர்ந்திடுதே!
பள்ளிக்குசெல்லும் பிஞ்சுகள்
பள்ளிவாகனத்திலேயே நசுங்கிடுதே!
படிக்கசெல்லும் விடலைகள்
பாவிகளால் பருவத்தைதொலைத்திடுதே!
அலட்சியம் மிகவே காக்கின்றீர்
அரசுயெந்திரத்தோரே நீங்கள்
அனுதினமும் நெஞ்சை நசுக்குகின்றீர்
தினந்தினமும் ஒரு மழலையை நசுக்கியே!
மனிதமொட்டுக்களை கசக்குகின்றீர்
மனதில் பெரும்தீயை மூட்டுகின்றீர்!
மானுடவித்துக்களை கருக்குகின்றீர்!
மதிகெட்டு வீணராய் அலைகின்றீர்!
இதுவேதான் தொடர்கதையோ
கண்ணீர்தான் தலைவிதியோ
மனிதர்யாம் இனி நடைபிணமோ
மனிதம்தான் இங்கு புதைத்தோமோ ?????

எழுதியவர் : எழுத்து சூறாவளி (17-Nov-12, 11:31 pm)
பார்வை : 245

மேலே