தமிழ் தாயே...!!

* தலைமுறை பல தாண்டியும் தன்னிலை மாறாத
எம் தமிழன்னையே...!
* காலமெனும் ஓடையில் கரைந்து போன
பல பழமைகளுக்கு இடையிலும்
உன் பளபளப்பு இன்னும் குறையவில்லையே...!!
* கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்கு
முன் தோன்றிய உன்னில் கருத்தரிக்க
நாங்கள் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்...!!
* உன்னை உச்சரிக்கும் பொழுது நாவில் எழும்
தித்திப்பை மிஞ்சும் இனிப்புப்பண்டமும்
உண்டோ வேறெங்கும்..!!
* உன்னோடு காதலாகிதான் எம் முன்னோர்கள்
அளித்துச் சென்றார்கள் சில
நல்லொழுக்க இலக்கியங்களை...!!
* தன்னை நாடும் வறியவர்க்கு
வாழ்வளிக்கும் வள்ளல் நீ..!
ஆனால் சகட்டு மேனிக்கு சிலர்
பிதற்றுகிறார்கள் இங்கே..!!
* அழிந்து வருகிறாயாம் நீ...!!
கரைந்து போகிறதாம் உன் சிறப்பு...!!
எத்தனை மூடத் தனம் வேண்டும்
இதனை உரைப்பதற்கு...!!
* இன்றும் உன்னில் கவிதை பேசினால்
கைதட்டல்கள் வானைப் பிளக்கும்...!!
கூட்டம் மயிர்கூச்செறியும்...!!
* அயல் மொழி வந்துவிட்டால்
எங்கள் உயிர்மொழி நீ
இறந்து விடுவாயா என்ன..?
* காலத்தால் நீ நிச்சயம் மாறப்போவதில்லை..
ஆனால் காலத்தை மாற்றிக்காட்டியவள் நீ..!!
உன் கம்பீரத்தின் நிழலில் தான் நாங்கள் எல்லோரும்...!!
* எங்கும் நீயே...!! எங்கள் தமிழ் தாயே...!!

எழுதியவர் : ரமணி (22-Nov-12, 11:20 am)
பார்வை : 247

சிறந்த கவிதைகள்

மேலே