எனக்கு மட்டும் நீ!!!!
ஒரு முறையாவது என்னை திரும்பிபாரடி!
என் கண்கள் ஓய்வு பெறட்டும்
ஒரு முறையாவது என்னிடம் பேசிவிட்டு போ !
என் வாய் மௌனமாகட்டும்
ஒருமுறையாவது என்னை தீண்டி விட்டு போ!
என் தேகம் புனிதம் பெறட்டும்
ஒருமுறையாவது என்னை முத்தமிட்டு போ !
நான் குழந்தையாகிறேன்
உன் மடியிலும் மார்பிலும்
துயில் உறங்குகிறேன்!!!!