உதவிடும் பூக்கள் ....

விடிவதற்கே முன்னரே மலரும் பூக்கள்
விடிந்ததும் உதவிடும் உலகுக்கு பலவழியில் !

மலர்ந்த முகம் இருந்தாலும் மகளிர்க்கு
பூச்சரம் தேவை நாளும் சூடிக்கொள்ள !

ஆலயம் செல்லும் ஆத்திக வாதிகளுக்கு
அவசியம் தேவை அர்ச்சனை செய்திட !

அர்ச்சகரும் செய்வார் அங்குள்ள சிற்பத்தை
அலங்காரம் என்று பலவித பூக்களால் !

திருமணத் தம்பதிக்கு நிச்சயம் தேவை
வண்ண மலர்களால் மணக்கும் மாலையாய் !

சுபநிகழ்விற்குச் செல்லும் சுற்றமும் நட்பும்
வாழ்த்திட வழங்கும் வண்ணமிகு பூங்கொத்தாய் !

அரசியல் மேடைகளில் முழங்கிடும் முகங்களுக்கு
அணிந்திட அணிவகுப்பர் பலர் பூமாலையுடன் !

மறைந்த மனிதர்க்கு மரியாதை செலுத்திட
மனவருந்தி வைப்பர் மலர் வளையங்களை !

இறந்தவரின் உடல்மேல் கண்ணீர்ப் பூக்களாய்
இறுதி ஊர்வலத்தில் தூவிடும் மலர்களாய் !

உருமாறி உதவிடும் பூக்களும் பூமியில் !
உதவாமல் உதறிடும் உள்ளங்களும் உலகினில் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Nov-12, 2:58 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 121

மேலே