சின்னச் சின்ன எண்ண அலைகள்

சின்னச் சின்னதாய் வரும் அலைகள்
பின்னிப் பின்னி ஓடும் கால்கள்
சிவந்த அந்த கால்கள் நடுவே
சிறு துளையில் ஒளியும் நண்டு.

அக்கம் பக்கம் யாரும் இல்லை
சிக்கிக் கொண்டது என் மனது
சின்னச் சின்ன அந்த அலைகள்
சிறிது சிறிதாய் பெரிது ஆயின.

பாதம் கண்டு பருவம் கண்டு
பாதம் கொட்டை விழிகள் கண்டு
பாதகம் வந்து விடுமோ என
பதை பதைக்குது எந்தன் நெஞ்சம்.

அவள் யாரோ நான் யாரோ
அலை அடித்தால் போய்ச் சேர்வாளோ
அலைமோதும் மனத்தினை நான்
அடையாளம் கண்டு கொண்டேன்.

சின்னச் சின்ன அவ் வலைகள்
திரும்பத் திரும்ப வருவது போல்
பின்னிப் பின்னி என் மனதில்
மீண்டும் மீண்டும் அவள் நினைவே.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (28-Nov-12, 4:38 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 167

மேலே