என்தோழி

மனம் தாண்டிய
கற்பனையைக் கொண்ட உனது அழகு!

காற்று உன்னுடன் வாழ அனுமதித்த மகேசன்
என்னவோ என்னை,
உன்னை விட்டு தள்ளி வைத்தான்!..........

உன்னைக் கண்ட அழகு மிதப்பில்
புதைமணல் மீது நின்றாலும்
உள்ளே இழுக்க வில்லை !...................

நீ என்மீது கொண்ட கோபம் என்னவோ
மலைமீது காற்று கொண்ட கோபம்
போல் தான் நிலையற்றது !...................

உன் அழகு என்னவோ
தாய்க்கும் தாய்ப்பாலுக்கும் உள்ள மகத்துவம் போல தூய்மையானது !....................

தங்க அணிகள் என்னவோ
அணி காட்டவில்லை என்றாலும்
என்னைக் காடும்
கோஹினூர் வைரம் தான் சிறப்பு !.....................

ஆற்றுப்படுகை மண்ணிலுள்ள நீர் போல உன்குணம் மிகவும் கணிவானது!..........

உன் குரல்
மழைத்துளியும் பனித்துளியும் சேர்த்து பருகியது போல் மிகவும் குளுமையானது !...............

உனது கரங்கள்
என்னவோ
என் கண்ணில் மயில் தோகை பிம்பமாகவே விழுந்தது !.........................

விண்மீன் என்னவோ பகலில் மறைமுகம் காட்டும் அன்று விண்மீன் கூட்டம் என்னுடன் !............

உன் அழகைக் கண்டவுடன்
கண்ணீருக்கும் நட்பு வரும் !.................

உன்னுள் தோன்றிய ஒன்றின் காதலின் நிராகரித்ததன் காரணம் கூறுவாயா?.........

உன் பெயரை எழுத என் பேனா மை பெற்ற வரம் இல்லை சாகாவரம் என்னவோ ?.................

உன் அணி சோகத்தில் வர்ணிக்கப்பட்ட கவிதைகள் கூட நட்பு கவிதைகளாக உருவெடுக்கும் !....................

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (30-Nov-12, 6:22 pm)
பார்வை : 588

மேலே