இணைந்திடும் மனங்கள்

இருமனம் இணைந்திட திருமணம் செய்வர்
இருவேறு இனமானால் கலப்பு மணம் என்பர் !

இருவீட்டார் பேசி முடிப்பது செய்முறை
சாதி மதம் மாறாதது என்றும் நடைமுறை !

கண்கள் பேசி மனங்கள் ஒன்றிட்டால்
காதலும் மலர்ந்து சாதியும் மறைந்திடும் !

அறியா முகமுடன் அவசரக் காதல்
தெரியா முகவரியாய் புரியா ஆத்திசூடி !

கண்களும் மனங்களும் எடுக்கும் முடிவை
கணினிகள் எடுப்பது கலியுகச் சாதனை !

மாறிய முறையால் தேறிய காதல்
பாடிடும் சிலநாள் , வாடிடும் பலநாள் !

திரையில் பார்த்து காதலிக்கும் மனங்கள்
திசைகள் அறியாப் பாதையில் பயணங்கள் !

சோதிட மணங்களும் சோகத்தில் முடிகிறது
காதல் மணங்களும் கசந்துப் போகிறது !

வளமான வருங்காலம் இனிதே அமைவது
சிந்திக்கும் இளைஞரின் சீரிய முடிவில் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Dec-12, 2:51 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 207

மேலே