கவிஞன்
என்னுள் உள்ள கோபத்தை,
வீட்டாரிடம் காட்டினால்
"ராட்சஷன்" என்ற பட்டம்
வெளிவட்டாரத்தில் காட்டினால்
"டென்ஷன் பார்ட்டி" என்ற பட்டம்
என்னுள்ளேயே வைத்தால்
"மன நோயாளி" என்ற பட்டம்
என் பேனாவில் காட்டினால்
"கவிஞன்" என்கிறார்கள்.....
- யாரோ