இதயம்

இன்பமும் துன்பமும்
பிறப்பும் இறப்பும்
நல்லதும் கெட்டதும்
இரக்கமும் இரங்கலும்
அன்பும் ஆத்திரமும்
ஆசையும் கோபமும்
கவலையும் காதலும்
நன்றியும் துரோகமும்
பணிவும் பாசமும்
நட்பும் பகையும்
யாவும் சேமிக்கவும்
அதனை செலவிடவும்
அகத்தேக் கொண்ட
ஒரே மனித கணினி
இயற்கை மென்பொருள்
இதயம் இதயம் இதயம்
இதயம் மட்டும்தான் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-Dec-12, 1:26 pm)
Tanglish : ithayam
பார்வை : 156

மேலே