அன்புத் தோழியாய்

உன் விரல் தீண்டி
பல கதை பேசியதில்லை
உன் கைகோர்த்து
பல துரம் நடந்தததில்லை

தொலைதூரத்தில் நீயிருக்க
அடியேன் நிழல் கூட தொடவில்லை
தொலைபேசி அழைப்புக்களில்
தொல்லைகள் பல நான் தர
பொறுத்தாய் பொறுமையாய்

என் வாழ்வுதனில்
தோழியே..!!! நீ
நிலவாய் வந்தால்
காலையில் கணவாய் மறைவாய்
எனவே எந்தங்கையாய்
வரவேண்டினேன்

பிறப்பின் கருவறை வேறாயினும்
கருத்து கருவறையோ ஒன்று
உடனிருந்து குழிபறிக்கும்
உறவினருக்கு மத்தியில்
உடன் பிறப்பாய்
உயிர் கொடுக்கும்
உன்னத உறவு நீயன்றோ

உண்மை காதலில் - அதிகம்
புரிதல் என்பது பொய்
அதைவிட நீயோ
அதிகம் புரிந்து கொண்டாய்
அன்புத் தோழியாய்...!!!!

கியாஸ் கலீல்

எழுதியவர் : கியாஸ் கலீல் (2-Dec-12, 7:03 pm)
Tanglish : anbuth thozhiyaai
பார்வை : 688

மேலே