கொஞ்சம் காதல் !?!
புது வீடு புகுந்து விட்டேன் எளிதாக
உன்னுள் புக மட்டும் இன்றுவரை போராட்டம் - என் காதலுடன்
இரும்பு கோட்டையும் இல்லை , மூங்கில் காடாகவும் இல்லை – உன் மனது
எப்படி புகுவது அந்த மாய இதயத்தினுள்
நாணலாக நானிருந்து மட்டும் என்ன பயன்
அளவுக்கு மிஞ்சி நஞ்சாகி விட்டது என் காதல் ...
ஆம் ...
என்னையே மாய்த்து விடும் நஞ்சாகி விட்டிருக்கிறது – என் காதல் ...
பசிகொண்ட குழந்தையாய் மாறிவிட்டது என் உணர்வுகள்
அரவணைத்து விட்டு போ கொஞ்சம் உன் காதல் கொண்டு !!!