மாற்றுத் திறனாளிகள்

கருவாகி உருவாகிப் பிறந்திடும் எவரும்
எருவாகிப் போவது ஒருநாள் நிச்சயம் !
உருவத்தில் மாற்றம் பருவத்தில் தெரியும்
அங்கத்தில் குறையோ பிறப்பின் பிழையாகும் !

முழுதாய்ப் பிறந்ததால் நிறைவான மனிதரல்ல
குறையுடன் பிறப்பவரும் குற்றமுள்ள உயிரல்ல !
மாறாத உருவத்தில் மாசிருக்கும் உள்ளத்தில்
குறையுள்ள உடலிலும் மாற்றுத் திறனிருக்கும் !

ஒருநிமிட இடைவெளியில் ஓராயிரம் அதிகரித்து
எண்ணிக்கை மாறிடும் மக்களுள்ள நாட்டினிலே
குறையிலா மனிதர்க்கே வாழ்ந்திட குடிலில்லை
ஓடாய் உழைத்தாலும் உயிர்வாழ உணவில்லை !

அங்கத்தில் குறையுள்ள நிறைமாத தங்கங்களுக்கு
அகிலத்தில் வாழ்ந்திட அவரவர் நிலைக்கேற்ப
நம்மால் இயன்றளவு இவ்வுலகில் உள்ளவரை
வாழ்ந்திட வழிவகுப்போம் !
வளம்பெற செய்திடுவோம்
( மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கு எனது அர்ப்பணம் )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Dec-12, 10:21 pm)
பார்வை : 131

மேலே