வாழ்த்துக்கள்

வாயளவில் வாழ்த்துவதும்
நெஞ்சார வாழ்த்துவதும்
காரணமின்றி வாழ்த்துவதும்
தேவைக்காக வாழ்த்துவதும்
பார்த்ததால் வாழ்த்துவதும்
கைபேசியில் வாழ்த்துவதும்
தொலைபேசியில் வாழ்த்துவதும்
முறைக்காக வாழ்த்துவதும்
விருப்பமின்றி வாழ்த்துவதும்
வியக்குமளவு வாழ்த்துவதும்
இளையோரை வாழ்த்துவதும்
இருமனதோடு வாழ்த்துவதும்
நிறைவாய் வாழ்த்துவதும்
நன்றியால் வாழ்த்துவதும்
அன்பால் வாழ்த்துவதும்
பண்பால் வாழ்த்த்வதும்
வாழ்த்துவதில் வண்ணம்பல
எண்ணம் எதுவானாலும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தானே !
வாழியவே வாழ்த்துக்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Dec-12, 5:07 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 94

மேலே