தூறல்

ஆச்சரியம்
அடைந்தேன் சூரியன்
பிரசவித்த வானவில்லை
கண்டு ...

சூரியனை
கடல் விழுங்கிவிட்டது
என நினைத்தேன்
அனால்
என் கண்ணனை
அலைகள் மறைத்துவிட்டது

தரையில்
நதியாக பாய
தெரிந்த தண்ணீருக்கு
தாமரை இலையில்
ஓட தெரியவில்லை
இருந்தும்
அடைக்கலம் கொடுத்தது
தாமரை பூவில்
பனித்துளிகளாக ...!

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (10-Dec-12, 4:19 am)
Tanglish : thooral
பார்வை : 82

மேலே