வசந்தத்தின் வாழ்வு

வசந்தம் தந்தது
வாரி இறைத்திருக்கிறது
இயற்கை காட்சிகளெல்லாம்...!

பக்தியையும்
பயத்தையும்
நெகிழ்வையும்
மகிழ்ச்சியையும்
ஒரு சேர உயிர்பிப்பது
நதியாம்...!

யானை,புலிகள் என
திகிலூட்டும்
விலங்குகளின்
தரிசனமாம் ...!

நீர் வீழ்ச்சிகள்
மனத்தைக்
கொள்ளையடிக்கும்
குளிர்ச்சிப் போர்வையில் ...!

பரவசம் தரும்
இனம் புரியாத
பூச்சிகளின்
ரீங்காரன்கலாம் ...!

கிவி,ஆப்பிள் போன்ற
கனிகள் எல்லாம்
காய்த்து குலுங்குகின்றன
வழிச் சாலை ஓரத்திலே ..!

மலைகளில் எல்லாம்
மேகக் கூட்டங்கள்
வெண்ணெய்யை அப்பியது போல
உல்லாசப் பயணமாய் ...!

பயணம் தொடரும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்
ஜனனம் உயிர்ப்பிக்கும் வரை
மரணம் இல்லை என்றும் தின ஜனனத்திற்கும் ...!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (11-Dec-12, 1:14 pm)
பார்வை : 67

மேலே