காற்றின் மொழி

பரப்பி விடுகிறது
குளக்கரை சுவரோடு
அவள் அணிந்திருந்த
பச்சைத் தாவணிகள் ...!

குட்டையாகிறது
குளத்துத் தண்ணீர்...
பச்சை நிற மரகதப் பஞ்சுபோல
பாசி படர்ந்திருக்கிறது ..
படித்துறைகளில்
ஆகாயத் தாமரைபோன்ற
செடிகளெல்லாம் மூடியபடியே ..!

பாம்பு சட்டைகள்
படர்ந்திருக்க அதனருகே
மூச்சற்றுக் கிடக்கிறது
கதிரவனின் மயக்கத்தில்
பேச்சுத் துணையின்றியே ..!

அங்கே அமர்ந்திருந்தவர்கள்
பேசும் பொறநிகளும்
கதைகளும் அந்தரத்தில்
ஓய்ந்த ஆலை சங்கைப் போல
மிதந்து கொண்டிருந்தபடியே ..!

தலையாட்டும் ஆலமரம்
ஆக்ரோஷமாக வீசும் புரியாமல்
புழுதிக் காற்றை வேகமாக
இறைத்தபடியே ..
எதையோ சொல்கிறது
ஏக்கத்தோடு....
யாருக்குத் தெரியும்
காற்றின் மொழி ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (11-Dec-12, 1:54 pm)
பார்வை : 77

மேலே