கூடங்குளம் - மின்சாரம் முழுதும் தமிழ் நாட்டிற்கே - ஞானதேசிகன்..! கேரளாவிற்கு 266 மெஹா வாட்..! அப்போ கர்நாடகத்திற்கு இல்லையா..?

கூடங்குளம் - மின்சாரம் முழுதும் தமிழ் நாட்டிற்கே - ஞானதேசிகன்..! கேரளாவிற்கு 266 மெஹா வாட்..! அப்போ கர்நாடகத்திற்கு இல்லையா..?

கூடங்குளத்தில் இன்று கடல் வழி முற்றுகை போராட்டம் நடந்து வரும் வேளையில், ஜப்பானில் மேலும் ஒரு அணு உலையை மூடி வரும் வேளையில், உக்ரைன் நாட்டுடன் புதிய அணு சக்தி ஒப்பந்தம் போட்டு வரும் வேளையில், கூடன்குள கழிவுகளை எக்காரணம் கொண்டும் கோலாரில் கொட்டக்கூடாது என்று கர்நாடக அரசு மற்றும் அணைத்து கட்சிகளும் கூறிவரும் வேளையில், இந்திய உச்ச நீதி மன்றத்தில் இதுகாறும் அணுக்கழிவுகளை எங்கு கொண்டுபோய் புதைப்போம் அல்லது கொட்டுவோம் என்று கூறாத அணு கட்டுப்பாடு ஒழுங்கு வாரியம் அறிக்கை தரதா வேளையில் தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஞானதேசிகன் அய்யா அவர்களும் அவரது கட்சியின் எம்.பி.க்களும் கூடங்குளத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அணைத்து மின்சாரத்தையும் தமிழ் நாட்டிற்கே என்று கூறவில்லை, தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று மின்சார துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யாவை சந்தித்து கூறியுள்ளார்கள்.

தமிழகதிற்கு தேவைப்படும் மின்தேவையும், கடும் மின் தட்டுப்பாடும் நிலவி வருவதால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்கள் தமிழக காங்கிரஸ் கட்சிகள்.அந்த மின்துறை அமைச்சரும் இவர்களின் கனிவான வேண்டுகோளை பரிசீலித்து பிரதமர் மண் மோகன் சிங் அவர்களிடம் கூறுவதாகவும் இன்று சொல்லியுள்ளார். பிறகு எதற்கு மின்துறை அமைச்சரை போய் பார்த்தார்கள் என்று தான் நமக்கு புரியவில்லை, நேராக பிரதமர் அவர்களையே சந்தித்து மனுவை கொடுத்திருக்கலாம், வேண்டுகோளை விட்டிருக்கலாம் என்று தோன்றுபவர்களுக்கு, என்ன பதிலாக இருக்கும்..? எல்லாம் முறைப்படிதானே செய்ய முடியும்..? ஸ்ட்ரைட்டா போவதற்கு இது என்ன உங்கள் வீடா வாசலா..? என்று கேட்பார்கள் போலும்.

இவ்வாறு ஒரு பொது சனம் கூறுகிறார் இந்த செய்திக்கு, நமது கவலையெல்லாம் என்னவென்றால் அப்போ கர்நாடக அரசிற்கு கர்நாடக மக்களுக்கு கூடங்குளம் கரண்ட் கிடையாதா..? இலங்கை அரசுக்கு கடல் வழியே கூடங்குளத்தில் இருந்து கரண்ட் கொடுப்பதாக முன்பு சொன்னார்களே..? அப்போ அவர்களுக்கும் கூடங்குளம் கரண்ட் கிடையாதா என்பதே என்றார். எப்படி என்றாலும் கூடன்குள அணு கழிவுகளை தமிழகத்தில் உள்ள பகுதிகளிலேயே கொட்டுவார்கள் புதைப்பார்கள் என்று கருதலாமா..?

இந்த செய்திக்கு ஒரு பதிவர் இவ்வாறு ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்.

தமிழ் நாட்டுக்கு ஏன் மின்சாரம்..? இப்போது கிடைக்கும் மின்சாரம் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு அடியையும் தாங்குபவன் தமிழன் என்று.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (11-Dec-12, 5:17 pm)
பார்வை : 171

மேலே