காத்து நின்றேன்

ஊரில் ஒரு நாள்
உறங்கும் நேரம்
கள்ளு வயிற்றில்
தெருவில் நடனம்
வீடுகள் எல்லாம்
இருளில் மிதந்தன
மின்சாரம் இல்லா
தெருக்கள் கூடக்
காடாய் கிடந்தது.
இயங்குதல் இன்றித்
தவித்தேன்
தடவித் தடவி
தெருவைக் கடக்க
குடிசை இருக்கும்
குச்சு ஒழுங்கை
கல்லுத் தடக்கி
விழுந்து எழுந்தேன்
குடிசையை நோக்க
கூர்மை பார்வையில்
தீக்கதிர் வீச்சு
புகை மண்டலம்!
விக்கித்துப் போனேன்
எனது குடிசை
எரிந்த தெங்கனம்?
கால்கள் நடந்தன
சத்தம் எழுந்தது
ஆத்திரம் நெஞ்சில்!
உயிர்த்தேன் நான்
நெஞ்சில் ஓருறுதி
நிலைத்து நிற்க
கொடுமை எதிர்க்கும்
துணிவில் எழுந்தேன்
காத்து நின்றேன்
கயமைத் தனத்தில்
ஊறிய மனிதரை
நெருங்கத் துணிந்தேன்.

எழுதியவர் : அழ.பகீரதன் (12-Dec-12, 10:31 pm)
சேர்த்தது : அழ.பகீரதன்
பார்வை : 497

மேலே