இரக்கமில்லா பெண்.

இரக்கமில்லா பெண் அவள்...
என் இதயத்தை திருடி சென்றவள்......
வட்ட முகம் கொண்டவள்
என் வாலிபத்தை சோதித்து சென்றவள்.....
வாயாடி பெண் அவள்..யாவரையும்
தன் அன்புக்கு வசப்படுதுபவள் ...
அழகிய தமிழுக்கு சொந்தக்காரி...
அனைவரையும் கொள்ளைகொள்ளும்
கவிதைக்காரி....
கார்மேகமும் கர்வம் கொள்ளும்
நீண்ட கார் குழலழகி .......
இருண்ட வானில் ஒளிரும்
ஒற்றை விண்மீன் கண்ணழகி..
அச்சு வெல்ல நிறத்தழகி....
சிணுங்கி சிரிக்கும் சிரிப்பழகி..
தேனாக இனிக்கும் பேச்சழகி ....
தாமரை பூ கன்னக்காரி.......
பார்ப்பவர் உயிர் வாங்கும்
உதட்டழகி...
என் உள்ளத்தை
வாங்கி சென்று விட்டாள்....

ஏரில் பூட்டிய மாட்டை போல
அவள் இழுத்த பக்கம் எல்லாம்
சென்றது என் காதல்.......
இப்பொழுது
அவள் விட்டு சென்ற திசை
பார்த்து நிற்கிறது ....

எழுதியவர் : முகவை கார்த்திக் (13-Dec-12, 4:24 pm)
பார்வை : 230

மேலே