தற்காலிக மன்னிப்பு ...........

தற்காலிக மன்னிப்பு ...........

உயிர்வரை உரையச்செய்திடும்
குளிர்த் தென்றல் .........

காண்பவற்றை காட்சியாக்கும்
மென்மையான விழிகள்.....

இயற்கையனைத்துயும் படம்பிடிக்கும்
சின்னதொரு இதயம்............

நீ ரசித்ததை எழுத்தாக்கிடென
எனைக் கெஞ்சும் எழுதுகோல்.........

இன்றேனும் ரசித்ததைப் படமாக்குவேன்
என்ரெண்ணியிருக்கும் வண்ணத் தூரிகை..........

"அனைத்திடமும் தற்காலிகமாய்
மன்னிப்புக் கேட்கிறது............"

என்னவனை மட்டுமே-சுற்றி
சுற்றிவரும் என்மனது.........

எழுதியவர் : Sureka (27-Oct-10, 2:11 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 433

மேலே