என்று தணியும் இந்த வறுமையின் தாக்கம்,,,,???

என்று தணியும் இந்த வறுமையின் தாக்கம்,,,,???

பாட்டாளி மக்கள்

பாடு படும் பாட்டாளி மக்களே
பகுத்தறிவு கொள்ள வேண்டி
பாடுகிறேன்,,, வியர்வை சிந்தி
உழைப்பதும் நீங்களே,,,உயிர்க்
கொண்டு விதைப்பதும் நீங்களே

இருந்தும் ஏன் இன்னும் ஓயவில்லை
இந்த பட்டினிப்பிணி,,,முடக்கப்பட்டிருக்கும்
அதிகார வர்க்கத்தின் காலக்கட்டத்திற்கு
பின்னும் ஏன் இந்த தீராத அவலம்

பணக்கார வர்க்கம்

பாடுப்படுவோரின் கைகளது மண்ணில்
பட மறுத்தால் பணக்கார வர்க்கமும்
வறுமையில் பஞ்சம் கண்டுவிடுமே,,,

இல்லை பட்டுடுத்தி சகட்டு மேனிக்கு
பகட்டு பேசி காரில் ஏறி தினம் தினம்
திருவிழா தேராய் வீதி உலாதான்
போகமுடியுமா ???

உனக்கு முன்பாக முதுகொடிந்து
கூன் விழுந்து தோளில் கழனி சுமந்து
போர் தொடுக்க போய்க்கொண்டிருக்கும்
உழவர் தோழர்களுக்கு தோள் கொடு
அவரும் வாழ வழிவிடு,,,

அரசாங்கமும் அரசியல் வாதி(வியாதி)களும்,,,

அரசியல்வாதிகளுக்கோ அதைப்பற்றி
சிந்திப்பதற்கு நேரங்கள் கிடைப்பதில்லை
ஹோலந்தில் ஹோபீஸ்,,இங்கிலாந்தில்
இட்லி,,தாய்லாந்தில் உடற்பயிற்சி,,
ஸ்விஸ் பாங்கில் வரவு செலவு கணக்குகள்,,,
இதற்கிடையே கதருடுத்தி கதறிக்கேட்கும்
வாக்குப்பிச்சை,,,

அந்த வேஷ வார்த்தைகளுக்கு இடையிலே சிக்கி
சின்னா பின்னமாகிறது எம்முட்டாள்மக்களின்
ஆசைப்பிணிகள்,,,,

அன்னாடங்காச்சிகள்

சராசரி வாழும் சதைப் பிண்டங்களோ
இச்சைக்குவர்ந்து நச்சு சுகத்தின்
நடை பிணமாய் அச்சம் கொள்ளாமல்
செய்த பிழைகளால் பையிறுண்டு
கிடக்கும் பச்சைக்குழந்தைகள்
கண்ணீருடன் குப்பைத்தொட்டிகளில்

வறுமைக்கோட்டிற்கு கீழே வாழுகிறேன் என்கிறாய் ,,
தினம் நூறு ரூபாய் வருமானத்தில் உன் வாழ்க்கை விகிதம்,,,
பின்பெதற்கு வாரி வாரி பெற்றெடுக்கிறாய் பிள்ளைகளை மட்டும்
குப்பைத்தொட்டிகளுக்கு காணிக்கையாக்கவா,,,???

அரசாங்க கணக்கெடுப்பில் வராத,,
வரலாறு தெரியாத எத்தனையோ
அனாதை குழந்தைகளின் கணக்குகள்
இங்கே கொட்டிக்குவிந்திருக்கிறது
தூக்கி எறியப்பட்ட சமுதாயக்
கற்களாய்,,,,,

வீதிகள்தோறும் கூச்சலிடும் ஓலங்கள்
நெஞ்சைக் கிள்ளி எரியும் வேதனைகள்

விதி அதனை யார் படைத்தது,,, ???

அனாதை ஆசிரமங்களின் எண்ணிக்கைகள்
அதிகரித்தும் போதவில்லை அவர்களுக்கு
புகலிடம்,,,

கல்யாண சத்திரங்களிலும்,,
கோவில் முன்புறங்களிலும்
கழட்டி விடப்பட்ட கால் செருப்பினூடே,,
தள்ளி வைக்கப்பட்டிருக்கும்
இந்த தங்கக்குழந்தைகளின்
கதிதான் என்ன ???

இந்நிலைதான் நீடிப்பதின்னும்
எத்தனை காலம்,,???
திரும்பிப்பார்ப்போமா,,???
திருத்திக்கொள்வோமா,,??
விழித்திருப்போமா,,??
மக்களாகிய நாமாவது,,

என்று தணியும் இந்த வறுமையின் தாக்கம்,,???

அனுசரன்,,

எழுதியவர் : அனுசரன் (16-Dec-12, 11:02 pm)
பார்வை : 209

மேலே