கொடை

ஆசை வந்த போதெல்லாம்
வழங்கி வள்ளல் ஆகலாம்
காசைத் தடங்கல் இன்றியே
தந்து தெய்வம் ஏகலாம்

கொடுப்பதால் வரும் பள்ளம்
தானாய் நிறைந்து வழியும்
கொடாத கருமியின் உள்ளம்
போலே வருவழி சுருங்கும்

இல்லை என்றே வறுமையிலும்
சொல்லா மனிதன் வள்ளலாம்
தொல்லை பற்பல வருத்தியும்
துவளா தன்மை பெருமையாம்.

வறண்ட ஆற்று மணலென
பாலை நிலமாய்த் தோன்றினும்
திரண்ட பரப்பினில் சிறுகுழி
தோண்டிட ஊற்றுப் பெருகிடும்

வரையரை இன்றிக் கொடுப்பவர்
தனதெனச் சொந்தம் கொண்டாடிடும்
உடைகரை வெள்ளக் கொடையெலாம்
தெய்வீகக் கொடை யென்றாகுமே.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (17-Dec-12, 1:53 pm)
பார்வை : 190

மேலே