முதல் துளி ..

மெல்ல மெல்ல மேகங்கள் ஒன்றுகூடி
ஒன்று திரட்டிய நீரையெல்லாம்
மழையாய் பொழிகிறது பூமியில்
வெப்பத்தை தாங்க முடியாத பூமிமகள்

மழையின் முதல் துளி பட்டதும்
துள்ளுகின்றாள் வானத்தை நோக்கி
பல துளிகள் ஒன்றாய் விழ
பக்குவமாய் பரப்பி விட்டாள்...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (17-Dec-12, 2:19 pm)
சேர்த்தது : r.mohanasundari
Tanglish : muthal thuli
பார்வை : 203

மேலே