போராட்டம்
போராட்டம் நாளும்
போராட்டம்
கருவறையிலே தொடங்கிய
போராட்டம்
கல்லறை சென்று அடையும்வரை
போராட்டம்
பிள்ளையை பள்ளியில் சேர்ப்பதே
பெற்றோருக்கு போராட்டம்
கையில் காசு இல்லை என்றால்
போராட்டம்
முதலாளிக்கும் தொழிலாளிக்கும்
போராட்டம்
இருந்தாலும் இல்லை என்றாலும்
போராட்டம்
மண்ணுக்கும் விண்ணுக்கும்
போராட்டம்
மனிதன் இம்மண்ணுலகில் வாழும்வரை
தொடரும் போராட்டம்
- கோவை உதயன் -

