என் உயிர் நண்பர்களுக்காக...!

என்ன என்ன கனவுகளுடன்
கல்லூரிக்கு சென்றேனோ
அத்தனை அத்தனை இன்பங்களையும்
அனுபவித்தேன் நண்பர்கள் எனும் கடவுளிடம்

கடவுளை விட சிறந்தவன் நண்பன்
ஏன் தெரியுமா ?
இன்பமோ துன்பமோ
கஷ்டமோ துக்கமோ கடவுளிடம்
முறையிட தான் முடியும் ...
நண்பன் ஒருவன் தான் நிலை அறிந்து
கைகொடுப்பான் ....

கனவுகளுக்கு காட்சி கொடுத்தான்
என் உயிர் தோழன்...
நினைவுகளுக்கு நினைவூடினான்
என் உயிர் தோழன் ....

விட்டுச் செல்லும் காதலை விட
விட்டுக்கொடுக்கும் நட்பு போதும்
காதல் தெய்வீகமானதா
தெரியவில்லை ...?
ஆனால் நட்பு தெய்வம் ஆனது ...!

நட்பிற்கு எல்லை இல்லை
என்று கூறுவோருக்கு
மத்தியில் கூறுகிறேன் நான்
நட்புக்கும் எல்லை உண்டு
இடம்.. பொருள்.. ஏவல்...
நடப்பிற்கு மட்டும் தெரியும்

மனித வாழ்கையை மீண்டும்
வாழ விரும்புகிறேன் ...
என் உயிர் நண்பர்களுக்காக...!

எழுதியவர் : கருணாநிதி .கா (19-Dec-12, 7:01 pm)
சேர்த்தது : Karunanidhi Arjith
பார்வை : 613

மேலே