கருவறுக்கப்பட்ட எம் பூமி.......
விழித்தெழும் பிள்ளையிடம்
தன் தாய் மரணமுற்றதை
எப்படிக் கூறுவது
மாண்டுபோன
உறவுகளின் உடல்களை
குவிக்கப்பட்ட சடலக் குவியலில்
எங்கே தேடுவது
சவங்களின் நடுவே உண்ட
உணவின் ருசியைப் பற்றி
யாரிடம் சொல்வது
கருவறுக்கப்பட்ட
எம் பூமியை
யார் மீட்பது
கை தொடும் தொலைவில்
ஏழு கோடி மக்களிருந்தும்
ஏளனமாய்ச் சிரிக்கும் சிங்களவனை
என்ன செய்வது
பசியின் கொடுமையில்
பிச்சைக்கு கை நீட்டும்
பிஞ்சுக் கைகளில்
எதைக் கொடுப்பது
செவிகளில் கீச்சிடும்
முடிவுறா மரண ஓலத்தின்
பெருங்கூச்சலை
யார் நிறுத்துவது
கருவறுக்கப்பட்ட
எம் பூமியை
யார் மீட்பது.......!!!!!!