நட்பு...காதல்...அன்பு...

நட்பு....
காதல்....
அன்பு....
இவை எல்லாமே....
கனவுகளாகவோ ....
கற்பனையாகவோ...
கவிதையாகவோ....
ஏக்கமாகவோ...
எரிச்சலாகவோ...
கிறுக்குதனமாகவோ....
குறைந்த பட்சம்..
கோபமாகவாவது
வெளிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.....
இல்லையென்றால் அதன்
பாரத்தை தாங்கவே முடியாது...!
கொல்லாமல் கொல்லக்கூடியது...
ஒன்றையும் வெளிப்படுத்தாத "மௌனம்"
ஆனாலும் கூட....
உன் மௌனத்தின் பின்னால் உள்ள
வார்த்தைகளையும்....
உன் கோபத்தின் உள்ளே உள்ள
அன்பையும் .....
உணர்ந்தவர்கள்.....
"முழுக்க முழுக்க உனக்கானவர்கள் "


எழுதியவர் : (28-Oct-10, 9:14 pm)
பார்வை : 830

மேலே