கணக்கு

பற்று வரவு என்ற கணக்கில்
நட்டமா லாபமா எனப் பார்க்கி|றார்
சற்றுங் கூட விட்டுக் கொடுக்காமல்
சட்டத்தின் துணை அவர் தேடுகிறார்.

லாபமும் நட்டமும் ஒன்று என்றால்
பாவமும் புண்ணியமும் ஒன்றன்றோ
லாபம் ஈட்டிட பாவம் கிட்டும்
பலனிதில் இங்கு பூச்சியந்தான்.

ஒரு பக்களில் ஒளியும் சூரியனுலகில்
மறு பக்கம் உதிப்பது விதியாகும்
கூட்டி கழித்து நீட்டிய வாழ்வில்
பயனிலை என்பது கதியாகும்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (24-Dec-12, 1:21 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 78

மேலே