பார்த்து எழுதுதல்.

பார்த்துப் பார்த்து எழுதும் மனிதன்
யார்க்கும் அஞ்சா நரிக் குணத்தான்
தானும் கெட்டு பிறரைக் கெடுத்து
வானமே எனது விளிம்பு என்பான்.

படித்து எழுதும் பாவி மனிதனோ
படிப்படியாக முன்னுக்கு வருவான்
படிக்காமல் பார்த்து நன்கு எழுதுபவன்
துடிக்காமல் எதிலும் முதலிடம் பெறுவான்.

பார்த்து எழுதுவதே பாவம் என்று
பெயர்த்துப் புத்தகத்தைச் சிலர் எடுப்பார்.
சட்டை அக்குள் காலிடுக்கு என
பட்டையாய் அடுக்கிப் பலன் பெறுவார்

பார்த்து எழுதிப் பொறியாளர் ஆனவர்
பாலம் கட்டினால் தானே வீழும்
பேர்த்து எழுதியே மருத்துவர் ஆனவர்
தீர்த்திட இயலுமோ தினமொரு நோயை..

எழுதியவர் : ந்தா. ஜோசப் ஜூலியஸ் (24-Dec-12, 1:39 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 125

மேலே