சச்சின் .....

ஒவ்வொரு இந்தியனும் பூரிப்படையும்
புத்துணர்வின் மறுபெயர் ......

முன்னேறத்துடிக்கும் இளைஞர்களின்
முரிந்துபோகா முதுகெலும்பு ......

நீ ....ஒருநாள் போட்டியிலிருந்து மட்டுமே
பெற்றுவிட்டாய் ஓய்வு .....தவிர .....

ஒருபோதும் ஒவ்வொரு இந்தியனின்
மனதிலிருந்து அல்ல ......

விமர்சனங்களை விரட்டியடிக்கும்
வினோதனே ......

இளம் வீரர்களை ஊக்குவிக்கும்
அதிசயனே ......

தோல்விகளை துரத்தியடிக்கும்
வீரனே .....

எதிர் அணியை கதிகலக்கும்
பீமனே ......

அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றும்
தனி நபர் தீரனே ........

அதிசயங்கள் பல புரிந்தும்
அமைதி காக்கும் அற்புதனே ......

உன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டியது
விளையாட்டு மட்டுமல்ல ......

வியக்கவைக்கும் உன்
எளிய வாழ்க்கையையும் தான் .....

சச்சின் ......
நீ நம் தேசிய சொத்து !

சச்சின் .......
நீ விடாமுயற்சியின் வித்து !

சச்சின் ........
சாதனைகளின் சகாப்தம் !

சச்சின் ........
ஆக்ரோஷ ஆட்டக்காரர் !
அன்பான ஆலோசனைக் காரர் !

மைதானத்தில் நீ கரைகடந்த வெள்ளம் !
மக்கள் மனதில் நீ தான் என்றும் செல்லம் !

ஒருநாள் தொடரிலிருந்து
நீ ஓய்வு பெறுவதை ...ஏற்காது ....

என்னைப் போன்று ஏங்கித் தேம்பி அழுகிறது !
எத்தனையோ கோடி இந்தியர்களின் உள்ளம் !

தலைவா ........
நீ எடுத்த முடிவு ஏற்ப்புடையதே என்றாலும் ...
ஏனோ ஏற்க்க மறுக்கிறது.........

என்னைப் போன்று
ரசிகர்களின் மனது .........

என்றும் உங்கள் ரசிகன்
ராஜேஷ் ........

எழுதியவர் : ராஜேஷ் ப (25-Dec-12, 6:27 pm)
பார்வை : 246

மேலே