1.யுத்தத்தின் சுவடாய் நான்...! -ஸ்நேகமுடேன் ஸ்நேகா
அனைவருக்கும் வணக்கம்..!
யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் தொகுப்பு எனக்கும் கிடைத்தது.அதனைப் படித்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இந்தத் தளத்தின் மூத்த படைப்பாளிகளின் பெருமுயற்சியால் விளைந்த மாபெரும் அடையாளமல்லவா அது.? அது மட்டுமா..? இந்த நூற்றாண்டின் பல்வேறு நிகழ்வுகள்,மக்கள் வாழ்வு,அதன் பிரதிபலிப்புகள்,தாக்கங்கள் என எத்தனை விஷயங்களைப் பேசுகிறது இந்தநூல்..!
இங்கே எனது வேண்டுகோள் ஒன்றுண்டு..இத்தொகுப்பில் இடம்பெற்ற படைப்பாளிகளுக்கு மட்டும்,அந்தப்புத்தகம் பாதுகாப்பான தடித்த அட்டையுடன் தயார்செய்து தரப்பட்டதாக அறிந்தேன்.அதனை முடிந்தவரை பத்திரப்படுத்துங்கள்..ஏனெனில் இன்னும் சில நூறாண்டுகள் கழித்தேனும்,சிந்துசமவெளி,ஹரப்பா,அரியலூர் வரலாற்றுச் சான்றுகளை அளித்த
ஊர்களின் பட்டியலில் உங்கள் ஊரும் இடம்பெறலாம்.அதற்கு இத்தொகுப்பே காரணமாகவும் ஆகலாம்.அந்தப் பெருமையை அளிக்கக் காரணம் நீங்களேவாகக் கூட இருக்கலாம்.!
இத்தொகுப்பு குறித்து இத்தனை நாள் ஏன் பேசாமல் மௌனம் காத்தாய்..? என்றொரு கேள்விகூட உங்கள் மனதில் எழலாம்.! அதற்குக் காரணம் உண்டு.
-ஒரு முறை இறைதூதர் முகமது நபி அவர்கள், தொழுகைக்கு மிகத்தாமதமாக வந்தாராம்.அப்போது அவருடைய நண்பர்கள் தாமதத்திற்கான காரணம் கேட்டபோது எனக்கு முன்பு என்னைவிட வயதான மாது ஒருவர் மிக மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரை முந்திக் கொண்டு செல்வது அவரது முதுமையை அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.! அதனால்தான் மெதுவாக அவரைப் பின்பற்றி நடந்து வந்ததால் தாமதம் ஆகிவிட்டது” என்றாராம். -
மூத்தவர்களை மதிக்கும் அந்தப்பண்பை,இளையவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும், அதனால் இத்தொகுப்பைப் பற்றி "இத்தளத்தில் இயங்கும் மூத்தவர்கள் முதலில் ஏதேனும் எழுதட்டும் அதுவரை பொறுமை காக்க..!" என்று,இதுவரை என்னிடம் எதுவுமே எதிர்பார்க்காத எனது தந்தையார் கட்டளையிடாமல்.., வேண்டுகோள் விடுத்ததால்
பொறுமை காத்தேன்.எனது காத்திருப்பைக் குறைத்த மூத்த படைப்பாளி அய்யா.கன்னியப்பன் அவர்களுக்கு நன்றி.!
இனி இத்தொகுப்பு குறித்து நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.இங்குள்ள படைப்புகள் குறித்து எனது பார்வையைப் பகிர்ந்து கொள்வேன்.அந்தக் கருத்துக்களில் ஏதேனும் குறையிருந்தால்..அது எனது அறிவின் குறைபாடே தவிர..,படைப்பின் குறையல்ல..என்பதை உங்கள் அனைவருக்கும் இங்கு முதலிலேயே சொல்லிவிடுவதும் நல்லது என்றே நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்
ஸ்நேகமுடன் ஸ்நேகா .!