2.யுத்தத்தின் சுவடாய் நான்..ஸ்நேகமுடன் ஸ்நேகா..!

இத்தொகுப்பிலுள்ள சிறப்பு என்று சொல்லப் போனால்..ஒவ்வொரு விஷயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

-அவன் மிக அறிவானவன்.அனைவருக்கும் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கும் தகுதி வாய்ந்தவன்.அவனோடு பேசவும்,பழகவும் எல்லோரும் விரும்பும் குணமுடையவன்கூட.., நோய் நொடிகளால் தாக்கப்படாத ஆரோக்கியமான தேகமுடையவன்.இது எல்லாமே அவனோடு தொடர்ந்து பழகிவந்தால்தான் மற்றவருக்குப் புரியும்.ஆனால்.,அவனைப் புதிதாகப் பார்க்கும் யாரும் தங்கள் பக்கம் அவனை அனுமதிக்க மாட்டார்கள்.
இவ்வளவு ஏன்.? அவன் இருக்கும் இடத்தை அண்டுவதாயிருந்தாலும் விலகியே செல்வார்கள். காரணம்..தனக்குள் இருக்கும் சிறந்த குணங்கள் வெளிப்படும் எந்த அடையாளமும் அவனுக்கு இருக்காது.உடைகள்கூட பொருத்தமில்லாமல் தான் இருக்கும்.உடைகளால் மட்டுமா ஒருவன் அடையாளப்பட வேண்டும்.? என்று நீங்கள் கேட்கலாம்.
உடைகளும் பொருத்தமாய் இருப்பது மற்றவர்களிடம் நெருங்குவதற்குரிய ஒரு கருவி எனும்போது.அதுவும் அவசியமாகிறது அல்லவா.? –

நல்லவேளை.., இந்தத் தொகுப்பிற்கு அந்த நிலை ஏற்படவே வாய்ப்பு இல்லை.அந்த வரிசையில் நான் முதலில் குறிப்பிட விரும்புவது.. இத் தொகுப்பின் தலைப்பு. “யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்..!” பொதுவாக ஒருநூலின் பெயரை வாசகன் வாசிக்கும்போதே..இந்நூலில் என்ன.எதைப்பற்றி சொல்லப்பட்டிருக்கும்..? என்ற யூகத்தை வாசகருக்கு அந்நூல் அளித்துவிடும். அவ்வாறு மனதில் பதிவதே அந்நூலின் முதல் வெற்றியாகும்.

இந்தநூலின் தலைப்பை வாசித்தவுடனே..இந்த நூற்றாண்டில் மனிதகுலம் சந்தித்த மாபெரும் அவலங்களில் ஒன்றான,உலகநாடுகள் கண்டணம் தெரிவித்தும் தொடர்ந்து கொண்டிருந்த..,எதையும் நிறுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் எனப்படுபவை கூட கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த..அல்லது வல்லரசு நாடுகளாலேயே நடத்தப்பட்ட ஈழப்போர்..,மனதில் சட்டென்று தைக்கிறது.
அந்தவகையில் இந்தநூல் தனது முதல்வெற்றி யைப் பெறுகிறது.இந்தக்கருத்துக்கு இசைவான அட்டைப்படம்,அதில் பொருத்தமாய் சேர்க்கப்பட்டிருக்கும் வண்ணங்கள்..பின்னனியில் தெரியும் படம் என ஒவ்வொரு விஷயமும் அற்புதமே..! இதனை இவ்வாறு வடிவமைத்த அனைவருக்கும் முதலில் எனது வாழ்த்துக்கள்..! இதனைக் கையில் வைத்திருக்கும் நீங்களும் அவ்வாறே வாழ்த்தியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.!
மற்றவை குறித்து மீண்டும் எழுதுவேன்..!


என்றென்றும் அன்புடன்..!

எழுதியவர் : ஸ்நேகமுடன் ஸ்நேகா..! (26-Dec-12, 7:56 pm)
பார்வை : 149

மேலே