அனைவரையும் நேசிப்போம்
அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் ஆலயங்கள்
மதங்களை போதிக்க
முண்டி அடித்துகொள்பவர்கள் மத்தியில் மனிதத்தை போதிக்கத்தான் ஆளில்லை !
வாழ்வுக்கும் சாவுக்கும் போராடும் மக்களை
மந்திர தூண்டிளிடுகிறது மதமாற்றம் ,
நிறத்தால்,மதத்தால் , எல்லைகளால்
துண்டாடபடுகிறோம் தினம் தினம் !
மனிதம் ஆளவேண்டிய உலகை
மதங்கள் ஆள்கின்றன
வாழ்ந்து மடியும் பூமியும் ,
பொழிகின்ற வானம்மும் ,
சுவாசிக்கின்ற காற்றும் ,
பொதுவாகிப்போனபோது
எதில் அடையாளம் காண்கிறார்களோ மதத்தை !
மததத்துவங்களுக்கு மத்தியில்
காணாமல் போய்விட்டது மனோதத்துவம்
பெயரால் அடையாளங்கள் கண்ட
காலங்கள் மாறிப்போய்
குடுமியும் , தாடியும் , தலைப்பாகையும்
அடையாளங்களாய் !
இதயத்தில் இருக்க வேண்டிய அன்பு
இறுகிப்போய் மதத்தின் சின்னங்களாய்
தொங்கிக்கொண்டிருக்கின்றன கழுத்தில் டாலராய்!
கவுண்டன் விளைவித்தான்
பறையன் அறுவடை செய்தான்
ரெட்டியார் மில்லில் நெல்லை அரைத்து
செட்டியார் கடையில் அரிசியை வாங்கி
பாய் கடையில் பிரியாணியை சமைத்து
கிறிஸ்துவன் நான் பிள்ளைகளோடு சாப்பிட்டேன் ,
இங்கே எதை நான் வெறுப்பது
யாரை நான் ஒதுக்குவது !
ஓர் மண்ணில் பிறந்த நாம்
யாரையும் ஜெயித்ததில்லை
யாரிடமும் தோற்பதில்லை !
அன்பை போதிக்கதான் மதங்களே தவிர
அலட்சியம் செய்வதற்கில்லை
கொலை செய்வதை கொள்கையாக கொண்ட
மத கோட்பாடுகள் எதுவும் இல்லை !
வாருங்கள் இனியாவது மதக்கதவுகளை மறந்து
மனக்கதவுகளை திறப்போம்
அனைவரையும் நேசிப்போம்
அன்பை போதிப்போம்
சமத்துவம் செய்வோம்
சமாதானம் செய்வோம்
கடவுளை தேடுவதை மறந்து
மனிதத்தின் புனிதத்தை எடுத்து சொல்லி
மனிதனை தேடுவோம்
மனிதத்தை தேற்றுவோம்
மனிதனாய் மறைவோம் !