அலை பேசி

கைக்கு அடக்கமான
கட்டழகு கருப்பு நிற
காதல் ரோஜா...!

காதோடு
முத்தமிட்டுக்
கொண்டிருக்கும்
சின்னஞ்சிறிய குழந்தை...!

எங்கள்
இருவருக்கும்
இடையில்
சண்டையையும்
சமாதானத்தையும்
உருவாக்கும்
சாகசக் கார நண்பன்...!

எங்களின்
ரகசியங்கள்
அறிந்த
ஒரே ஒரு
ஜீவன்...!

எந்தன் இதயம்
எந்நேரமும்
துடித்துக் கொண்டிருப்பது
உந்தன் குரலுக்காக
மட்டுமல்ல
உந்தன் குரலுக்குள்
காத்திருக்கும்
எந்தன் உயிருக்காக தான்...!

எழுதியவர் : சுதந்திரா (30-Oct-10, 7:11 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 687

மேலே