புதுமைப் பெண்ணே....ஏனடி இந்நிலைமை ?!!!
உடன்கட்டையில் அன்று உன்னை
உயிரோடு எரித்திட்டார்.....
உணர்வுகளை இன்று கொன்று
உடல்தசையை கிழித்திட்டார்....
நரிகளின் கூட்டமது உன்னை
நாசப் படுத்திச் சென்றதடி
நடு இரவில் பெண் நடக்க
நடத்தை கெட்டவள் என்று எண்ணி...
கல்வி அறிவு மிஞ்சினாலும்
காட்டு மிராண்டித்தனம் போகலையே
கன்னிப் பெண்ணை கருவறுக்கும்
காலிப் பயலுக சாகலையே....
கண்ணைக் கட்டி நீதி தேவதை
கம்முன்னுதான் நின்னாளே.....
கயவர்களின் வெறித்தனத்தை
கண்டுக்காமப் போனாளே.....
காவலிலே அவனுகளை வச்சி
கட்டுச் சோறு போட்டாளே.....
காசு பணம் வாங்கி கொண்டே
கவலை இன்றி விடுவிப்பாளே....
வலிக்கிறதா இன்னும் உனக்கு....
வாய் பேசா பூச்சியடி நீ.......
வளர் சக்தி நீ என்பார் பாவிகள் உன்னை
வதம் செய்தே மகிழ்ந்திடுவார்......