நஷ்டங்கள்
நஷ்டங்கள்
(கவிதை)
அறியா வயதினில் அன்னையை இழந்ததில்
அரவணைப்பு நஷ்டம்!
அறியும் வயதினில் ஆசானை இகழ்ந்ததில்
அறிவு நஷ்டம்!
காளை வயதினில் கட்டுப்பாடு மறந்ததில்
கற்பு நஷ்டம்!
கால ஓட்டத்தில் கடமையை மறந்ததில்
கண்ணிய நஷ்டம்!
ஓடும் வயதினில் உழைக்க மறந்ததில்
ஊதிய நஷ்டம்!
தேடும் வயதினில் தேடலை மறந்ததில்
தேவை நஷ்டம்!
வீழும் வயதினில் விலக மறுத்ததில்
வீராப்பு நஷ்டம்!
விழுந்து விட்டபின் விட்டம் நோக்கியதில்
வாழ்வே நஷ்டம்!!
முகில் தினகரன்
கோவை