அன்னக்கொடி

பேணுதல் “மனிதம்”, அதை உணர்வது “புனிதம்”

இறைமை என்பது புனிதம்

புனிதம் படைக்க முயன்று,
இறைமை ஆளுக்கொன்றாய் போனது

மனித குலம் பிரிந்தது புவியின் பரப்பால்!

அதில் பிரிவினை கண்டது ஒருமை தேடும் புனிதம்!

புதிய புனிதம் கண்டது மனிதம்!
கொண்டது உயர்வு கொடிகளின் வடிவில்
நாடிய வண்ணங்களில் நாட்டிக்கொரு கொடியில்,

நாட்டுக்கொரு கொடி என்று, கட்சிக்கென கொடி கண்டு
உயரநினைக்கும் மனிதம்

தனக்குப் பொதுவான கொடிகாண
மறந்ததும் ஏனோ?

மனிதத்தை வணங்க மனமில்லை மனிதற்கு!

இருப்பின்
உயிர்கொடுக்கும் உணவு தரும்
கொடி ஒன்று கண்டும் மறுப்பது ஏன்
அதில் புனிதம் காண?

வணங்கலாமே அந்த கொடிகண்டு
புனிதம் அதில் கண்டு

ஏற்கலாமே எண்ணம் கொண்டு
உயிர்பெறும் உணவுதரும் உயர்வு பெறும்
ஒரு கொடியை
தன் மனிதகுல பொது கொடியாய்
அன்னக்கொடி எனக்கண்டு!







மங்காத்தாவின் பின் குறிப்பு

(தனிவிடுகைக்கு மதிப்பளித்து, மிகவும் கடினமாக முயன்று, வார்த்தைகளுக்கு "ஆர்டர்" செய்து, வரவழைத்து பொறுமை காத்து
செய்த படைப்பு.
(சத்தியமா சொல்றேன் இது மாதிரி எல்லாங் நா எழுதினதே இல்ல)

ஆனா இது போட்டிக்காக செஞ்ச படைப்பு இல்ல.. மத்தவங்களுக்கு முன்னால ஓடி போய் பார்வையாளராய் சீட் பிடிக்கும் ஒரு சின்ன முயற்சிதாங் சாமீயோவ்)

எழுதியவர் : மங்காத்தா (29-Dec-12, 4:58 pm)
Tanglish : annakkodi
பார்வை : 117

மேலே