புத்தாண்டின் தேவைகள்.

விழியோரம் ஈரமான மனிதனுக்காக
ஓடிடும் கால்களும் துடைத்திடும் கரங்களும்
காய்ந்து தேய்ந்த முதிர்ந்த மனிதனுக்கு
ஆறுதல் தரும் இதமான மனைகளும்

வன்முறை வந்த சுவடு தெரியாமல் மறைந்த
புத்தம்புதிய தென்றல் வீசும் புதிய பூமி
குடியாத குடிகளும் கொலை புரியாத மனிதரும்
கற்பை பாதுகாக்கும் கட்டிளங் காளைகளும்

தூய நல அரசும் குடிகாக்கும் பொது நலனும்
பசிப்பிணி ,கொள்ளை நோய்,இல்லாத நாடு
பசுமையும் வெண்மையும் தியாகமும் நிரந்தரமாய்
என்றென்றும் வாழ்ந்திடும் நித்திய பூவான பூமி

எழுதியவர் : டாக்டர் குமார் (1-Jan-13, 5:08 pm)
பார்வை : 104

மேலே