உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் கவிதை போட்டி)

பல பேர் பசியை போக்க உயிரை காக்க
தன் உயிரை மரணமாக்கி கொள்பவன் உழவன்
ஒவ்வொரு உழவனின் இறப்பும்
நாட்டிற்க்கு பெரும் இழப்பே
தன் இரத்தத்தை வியர்வையாக்கி
கஷ்டத்தை களிப்பாக்கி
உயிரை உரமாக்கி
பயிர் செய்யும் உழவன்
ஏமாற்றத்தை மட்டுமே அறுவடை செய்கிறான்
இரவில் தூக்கமின்றி நீர் பாய்கிறான்
பகலில் ஓய்வின்றி களைப்பறிக்கிறான்
ஒவ்வொரு பயிரையும் தன் பிள்ளைபோன்று
பாசமாய் பார்த்து பார்த்து வளர்க்கிறான்
பருவம் அடையும் நேரம்
பருவ மழையை காணோம்
பருவ மழையை நம்பி விதைவிதைத்தான்
பருவமழை பொய்த்ததால்
பாளம் பாளமாய் வெடித்திருக்கும்
பூமியை கண்டு கண்ணீர் வடிக்கிறான்
குடும்ப நிதியை எண்ணி வேதனைப்படுகிறான்
காய்ந்த மரத்திடம் சொல்லி புலம்பி தீர்க்கிறான்
வேதனைகளை சேர்த்து கயிராய் திரித்து
அந்த கயிறுலே உயிரை மாய்த்து கொள்கிறான்
வாழ வழியில்லாமல்...

எழுதியவர் : கார்த்திக் (1-Jan-13, 8:20 pm)
பார்வை : 163

மேலே