.......நாம் இருவர்..........
உன் எதிர்காலத்தில் நானில்லை,
என் நிகழ்காலத்தில் நீயில்லை,
சந்திக்கவே முடியாத நாம் ஒருவரை ஒருவர்,
சிந்தித்தபடியே வாழ்வது என்னடி நியாயம் ?
இணையமுடியாதவர்கள் பிரியவும் முடியவில்லையே !!
என்னதான் முடிவு நம் கதைக்கு ?
என்று நிற்கும் ?
மாறிமாறி இருவரும் நம் நினைவுகளை,
சிலுவையில் ஆழமாய் அறைந்துகொள்ளும் தன்மை !!