ஏட்டுச் சுரைக்காய்

இனிய வாழ்வு
இன்று நமக்குண்டு ,
இதில் பொதிந்த விஞ்ஞானம் ,
தேனீக்கள் போல் பலகாலம்
தின்னாமல் சேர்த்த தேனடல்!

(கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான கரியும் எண்ணெயும் இனி சிலஆண்டுக்குள் தீர்த்துவிடும் அபாயம்)

துருவித் தின்றே அழித்ததில்
பேரன் பேத்திக்கு
மிச்சம் என்ன ?

(கரியும்,எண்ணையும் துரப்பணம் செய்து தீர்ந்தபின்
ஆய்வு கூடத்தில் மட்டும் பார்வைக்கு.)

தேனீயின் சிறகில்
ஒட்டிய மகரந்தம்
இதன் எச்சமாவது
சந்ததிக்கு விட்டுச்செல்ல
விருப்பம் உண்டா...?

வருங்கால சந்ததிகள்
சங்கதிகள் தெரிந்துகொள்ள
புரட்ட வேண்டும் ஏட்டை

இவைகளெல்லாம்
ஏட்டில் மட்டும் சுரைக்காய்..!
வருங்காலங்களில்.

எழுதியவர் : Minkavi (2-Jan-13, 2:03 pm)
பார்வை : 222

மேலே