அந்த பாவாடை சிறுமி....

பேருந்து நிலையம் பொறுத்தருளும்
நடை வியாபாரியாய்....
அந்த பூ போட்ட பாவாடை சிறுமி...

அழுக்கான பூக்கள்
அழுதபடியே இருந்தது......
பாவாடை எங்கும்....

அவள் பூமுகம் தன்னில்..
வெயிலில் விளைந்த பனித்துளியாய்...
வியர்வை...

வெயிலின் தாக்கம் குறைக்கும்
வெள்ளரி விற்ற படி இருந்தாள்....
பள்ளி இவளை கைவிட்டதா?
இவள் பள்ளியை கைவிட்டாளா?

பெருங்குழப்பம் எழுந்தது என்னுள்...
பயணம் முழுவதும்...
என்ன யோசித்தும்....
முடிவாய் தோன்றியது....
இந்த கவிதையின் முடிவு வரிகள் மட்டும்...

ஏழை குடும்பங்களில்
பல சமயம்.....
"பசி தின்று விடுகிறது கல்வியை "

எழுதியவர் : (2-Jan-13, 9:49 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 159

மேலே