உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

உள்ளம் குமுறுகிறது,
என் பேரன் என்னைக் கேட்கின்றான்
''இது என்ன தாத்தா''என்று
வீட்டின் பின்புறத்தில் உடைந்து கிடக்கும்
கலப்பையைப் பார்த்து,

அவனுக்கு எதுவும் தெரியவில்லை
உழவைப் பற்றியோ,
உழவனைப் பற்றியோ

வயல் நிலங்களெல்லாம்
வானுயர்ந்த கட்டிடங்களால்
நிறைந்து கிடக்கின்றது.

ஊருக்கே கொடுக்குமளவிற்கு
நெல் விதைத்தவன்
இன்றைக்கு கடைக்குப்போய்
அரிசி வாங்கிவருகின்றேன்

இந்த நிலை தொடர்ந்தால்,
உழவனும்,உழவும்
அழிந்துவிடுமென்று பயமாயிருக்கின்றது.

தம்பிகளா,
சோற்றுக்கு கையேந்தும் நிலைவேண்டாம்.
உழவை சாகடிக்க விடாதீர்கள்

எழுதியவர் : கலைப்பிரியன் (அனுஜன்) (2-Jan-13, 10:39 pm)
சேர்த்தது : அனுஜன்
பார்வை : 113

புதிய படைப்புகள்

மேலே