கடவுளிடம் வரம் கேட்பேன் !!!

கடவுளிடம் வரம் கேட்பேன் !!!

நான் அழகு என்று நான் அறியா

ஊர் அறிந்து , முத்தம் இட்ட காலத்துக்கு - செல்வதற்கு !!!
கடவுளிடம் வரம் கேட்பேன் !!!

தெருவில் விளையாடி புழுதி ஆடை – அணிந்து
வீ ட்டிற்கு வந்த காலத்துக்கு - செல்வதற்கு !!!
கடவுளிடம் வரம் கேட்பேன் !!!

தெருவில் கிடந்த நாய் குட்டியை - வீ ட்டிற்கு கொண்டு வந்து ,

அம்மாவின் சினம் கண்ட காலத்துக்கு - செல்வதற்கு !!!
கடவுளிடம் வரம் கேட்பேன் !!!

தண்ணிரில் கிடந்த “தல பிரத்தை” -ஐ மீன் என்று
பிடித்து விளையாடிய காலத்துக்கு - செல்வதற்கு !!!

கடவுளிடம் வரம் கேட்பேன் !!!
பக்கத்து வீட்டு பெண்ணிடம் காதல் வார்த்தைக்கு அர்த்தம் ,
தெரியாமல் “காதல்” உருகிய காலத்துக்கு - செல்வதற்கு !!!
கடவுளிடம் வரம் கேட்பேன் !!!
-பாரதி கண்ணன்
First published in my private blog

எழுதியவர் : பாரதி கண்ணன் (2-Jan-13, 11:11 pm)
சேர்த்தது : பாரதி கண்ணன்
பார்வை : 93

மேலே