உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

இரவு பனியில் குளித்து,
காலை இளம் வெயிலில்,
தலை துவட்டி,
பச்சை பட்டு பாவாடை உடுத்தி,
யாரைக் காண
இத்தனை நாணத்தோடு
காத்திருக்கிறாள் இந்த வயல் கன்னி?
என்று பார்க்க
உழவனான நான்
ஆவலோடு தினமும்
என் வயல் காட்டிற்கு
போன காலம் ஒன்று உண்டு....

இன்று,
வான தேவன் ஆனந்த கண்ணீர் விட
மறுத்த காரணத்தால்
எங்கும் பசுமையோடு
நெல் மணிகளை கொட்டிய
என் வயல்
மன வேதனையோடு
மருகிபோய் நிற்பதை காணும்
காணும் சக்தியில்லை என்கண்களுக்கு...

எங்கு பார்த்தாலும்
பசுமையில் செழித்த
வயல் வெளி
இன்று மனைகளாக...
புகை பரப்பும் தொழிற்சாலைகளாக....
தேநீர் விடுதிகளாக.....
மண் கூடமாக....

கண்கள் இல்லை நில அன்னையே!
உன்னை இப்படி காண்பதற்கு..
என்ன பாவம் செய்தேன்?
இப்படி ஒரு கொடுமையை காண?

என் பசி போக்கி
என் குழந்தைகள் படிப்பை கவனித்து
திருமணம் செய்திட வழிவகுத்து
இன்று நான் தனிமையாக
நிற்கும்போது,
என் அன்பான நில அன்னையே!
நீயும் இப்படி மொட்டை பொட்டலாக,
காய்ந்து விட்டாயே...
சக்தி கொடு பராசக்தி!
இதை தாங்குவதற்கு...

எழுதியவர் : சாந்தி (2-Jan-13, 11:13 pm)
பார்வை : 138

மேலே