நட்பை வணங்குவோம் நண்பர்களே ....!
நினைத்து நினைத்து
பார்க்கத் தான்
முடியும் காதலை ....
நினைக்க நினைத்தாலே
அருகில் வருமே
நட்பு ...!
உருகி உருகி
மனம் வருந்த செய்யும்
காதல் ....
உருகி உருகி
தன் உயிரையும்
கொடுக்கத் துணியும்
உயிர் நட்பு ...!
காதலுக்கு
கண் காது மூக்கு
என்னவெல்லாம்
இருக்கோ இல்லையோ
தெரியவில்லை ....?
ஆனால் உண்மையான
நட்பிற்கு உயிர் மட்டும்
நிச்சயம் இருக்கிறது ....!
கண்ணீரின் மதிப்பறியாத
காதலை நேசிப்பதை விட
கண்ணீரை துடைத்து விடும்
நட்பை நேசிப்போம் ...!
அர்த்தமற்ற
காதலை விட ...
ஆயிரம் ஆயிரம்
அர்த்தம் உள்ள
நட்பை வணங்குவோம்
நண்பர்களே ....!