மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரே ஒரு இரகசியம்

ஒவ்வொரு நாளும் பிறத்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பிறப்பதற்கு அதற்கு முதல் நாள் இறத்தல் வேண்டும். உறக்கம் இறப்பாகவும் விழிப்பு பிறப்பாகவும் இருத்தல் வேண்டும். புதிதாகப் பிறக்கும் போது அன்று நாம் முகம் கொடுக்கும் ஒவ்வொன்றும் புதுமை. ஒப்பீடுக்கு இடமில்லாத புதிய அனுபவம். ஒவ்வொன்றும் அழகு. ஒவ்வொன்றும் அற்புதம். ஒவ்வொன்றும் தனித்துவம். நேற்றயவைகள் எதுவும் இல்லை. எல்லாமே புதியவை. நேற்றயவர்கள் எவரும் இல்லை. எல்லோரும் புதியவர்கள். இன்றைய அனைத்தும் உறக்கம் வரைதான். நாளைய விழிப்பு புதிய பிறப்பு. மீண்டும் எல்லாமே புதுமை, ஆச்சரியம், அற்புதம். 'வார்த்தையில் கூறலாம் ஆனால் வாழ்க்கையில் சாத்தியமா?' என்று நீங்கள் நினைத்தால் இதோ ஒரு சிறு பயிற்சி. காலையில் எழுந்ததும் உங்கள் துணையைப் புதிதாகப் பாருங்கள். உங்கள் குழந்தைகளை புதிதாகப் பாருங்கள். உங்கள் முற்றத்து மல்லிகையை புதிதாகப் பாருங்கள். அன்று நீங்கள் சந்திக்கும் ஒவ்வொன்றையும் புதிதாகப் பாருங்கள். புதிதாகப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள். நிச்சயமாக மகிழ்ச்சியின் இரகசியம் புரியத் தொடங்கும்.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (4-Jan-13, 7:14 pm)
பார்வை : 252

சிறந்த கட்டுரைகள்

மேலே