குருவான குருவி....

ஒற்றைப்பனையின் உச்சியில்
கொண்டையாய் ஒரு குருவி...

காற்றில் சமன் படுத்தி
சந்தோஷ அசைவுகளோடும்...

வந்த தூரலுக்காய்
சிறு மரக்கிளையில் தஞ்சம்...
சிறு கிளை முறியும் காற்றில்
அன்றியும்
குருவிக்கு தன் கால்களின்
மீதான நம்பிக்கை
எனக்கில்லை...

கட்டிய கூட்டின் குஞ்சுகள்
பறந்தன
முளைத்த சிறகுகளோடு.
மரமும் பறந்தது..
நானும் பறந்தேன்
விழிகளை வீட்டில் மறைத்து .....
நினைவுகளை
என் சன்னலில் புதைத்து...

அலைந்து திரிந்து வந்தது
குருவி ஒருநாள்
என் சன்னலோரம்..
புதைத்திருந்த என் நினைவுகள்
வினவின..,
"காணவில்லையே ,இத்தனை நாள்.
எங்கே நீ ??"
குருவான குருவி கூறியது ,
"என்னை தேடித் போனேன்..
நீயும் போவதில்லையா..?
அடிக்கடி போய் பார்.."

குருவியே வணங்குகிறேன்....
குருவாய் இரு நீ
குரு கூறினார்
'எதையும் உற்று நோக்கு..
உன்னையும் தேடிப் பார்.."

=====அகன்=====

எழுதியவர் : அகன் (6-Jan-13, 7:44 pm)
பார்வை : 140

மேலே