வானவில் ....
மஞ்சள்-
வறட்சியில் காய்ந்த சருகு
.............................................
வெள்ளை-
செத்து மடிந்த நத்தை கூடு
.....................................................
சிகப்பு-
கசப்பு கடைக்கு போன காளையின் ரத்தம் ..
......................................................
நீலம்-
மேகம் தொலைத்த வானம்
..............................................................
ஊதா-
நஞ்சுண்ட உழவனின் உதடு ..
--------------------------------------------
பச்சை-
வற்றிய உடம்பில் நெளியும் நரம்பு
..........................................................
கறுப்பு
பசுமை தொலைத்த வாழ்க்கை
------------------------------------------
உழவனின் விழிகளை
வந்து நனைக்கும்
மழை மறுத்த தேசத்தின்
வானவில் ....